உலகம்

தவறுதலாக எகிப்து ராணுவ எல்லையில் தாக்குதல்! வருத்தம் தெரிவித்த இஸ்ரேல்

கேரேம் ஷலோம் என்பது காஸாவையொட்டிய இஸ்ரேல் - எகிப்து எல்லைப் பகுதியாகும்.

DIN


தவறுதலாக எகிப்து ராணுவ எல்லையில் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் ராணுவம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல், காஸாவையொட்டியுள்ள எகிப்து எல்லையில் இஸ்ரேலின் பீரங்கி தவறுதலாக எகிப்து ராணுவ எல்லைப்பகுதியை நோக்கி சுட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அதில், சிலமணிநேரங்களுக்கு முன்பு இஸ்ரேலின் பீரங்கி தவறுதலாக கேரேம் ஷலோம் எல்லையையொட்டிய எகிப்து ராணுவ எல்லைப் பகுதியை நோக்கி தாக்கியுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது. 

கேரேம் ஷலோம் என்பது காஸாவையொட்டிய இஸ்ரேல் - எகிப்து எல்லைப் பகுதியாகும். தெற்கு இஸ்ரேல் படையினர் இங்கு காஸாவின் ஹமாஸ் படைக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையிலான போர் இன்று (அக்.23) 17வது நாளாகத் தொடர்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அலைகள், கருத்துகள் பற்றிக் கவலையில்லை... மயூரி கிரிஷ்!

செதுக்கா சிற்பமே... குஷ்பூ யாதவ்!

அலைகளுக்கு இடையே அறிந்தேன் என்னை நான்... சிவாங்கி வர்மா!

ஆண்பாவம் பொல்லாதது ஓடிடி தேதி!

நவீன சீரியலின் முடிசூடா மன்னர் திருமுருகன்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT