பேரம் பேசும் குரங்கு 
உலகம்

கைப்பேசியை பிடுங்கிக் கொண்டு உணவுக்காக பேரம் பேசும் குரங்கு

பாலியில், பெண் ஒருவரின் கைப்பேசியி பிடுங்கிக் கொண்டு உணவுக்காக பேரம் பேசும் குரங்கின் விடியோ வைரலாகி வருகிறது.

DIN


இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான பாலியில், பெண் ஒருவரின் கைப்பேசியி பிடுங்கிக் கொண்டு உணவுக்காக பேரம் பேசும் குரங்கின் விடியோ வைரலாகி வருகிறது.

தனது கைப்பேசியை திருப்பித்தர, சுற்றுலா பயணி ஒருவர் ஏதோ ஒரு உணவுபொருளைக் கொடுக்கிறார். ஆனால், குரங்கு அது வேண்டாம் என்று தலையாட்டுகிறது. பிறகு அவர் தனது பையிலிருந்து ஒரு பழத்தை எடுத்துக் கொடுக்கிறார். அதை வாங்கிக் கொண்டு காத்திருக்கிறது. மற்றொரு பழத்தையும் பெற்றுக்கொண்ட பிறகே கைப்பேசியை கொடுக்கிறது. இந்த விடியோவைப் பார்க்கும் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது ஆச்சரியத்தை வார்த்தைகளால் விவரித்து வருகிறார்கள்.

பாலியில் உள்ள மலைப்பகுதியை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலா பயணியின் கையிலிருந்த கைப்பேசியை அங்கிருந்த குரங்கு ஒன்று பறித்துக்கொள்கிறது. அப்போது, அவர் தனது கைப்பையிலிருந்து உணவுபொருள் ஒன்றைக் கொடுக்கிறார். அது வேண்டாம் என்று தலையசைக்கிறது குரங்கு. பிறகு பையிலிருந்து ஒரு பழத்தை எடுத்துக் கொடுக்கிறார். அதை வாங்கிக் கொள்கிறது. மற்றொரு பழத்தையும் கொடுத்த பிறகுதான் கைப்பேசியை கொடுக்கிறது. உடனடியாக அதனை அப்பெண் எடுத்துக்கொண்டு வந்த இடத்தைச் சுற்றிப்பார்க்க கிளம்புகிறார்.

இந்த விடியோ எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு பல ஆயிரம் லைக்குகளைப் பெற்றுள்ளது.

இதற்கு பலரும், சுற்றுலா பயணிகளிடமிருந்து உணவுபொருள்களை கேட்டுப் பெற்றும், பிடுங்கியும் வந்த காலம் மாறி, தற்போது பேரம் பேசி வாங்கும் கலையை குரங்குகள் மனிதர்களிடமிருந்து கற்றுக் கொண்டிருப்பதாகவே இந்த விடியோவைப் பார்க்கும் பலரும் கருதுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT