உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: 31 பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொலை!

DIN

இஸ்ரேல் தாக்குதலால் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு உறுதி செய்துள்ளது. 

இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த அக்.7 முதல் போர் தொடர்ந்து வருகின்றது. 3 வாரங்களையும் கடந்து நீடித்துவரும் இப்போரில் இஸ்ரேல் படையினர் காஸா எல்லைக்குள் தரை வழியாக நுழைந்துள்ளனர். 

வான் வழி, கடல் வழி தாக்குதலைத் தொடர்ந்து தரை வழியாக நடத்தப்படும் இந்தத் தாக்குதலை இஸ்ரேல்-ஹமாஸ் போரின் 2ஆம் கட்டம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

25வது நாளாக இஸ்ரேல்-ஹமாஸ் பயங்கரவாத மோதல் தொடர்ந்து வருகின்றது. இந்த போரில் 260 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 210 பேர் பிணையக் கைதிகளாகச் சிறை பிடித்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். 

இந்த நிலையில், போர் பற்றிய விவரங்களைச் சேகரிக்க பல்வேறு நாட்டினர் தரப்பில் பத்திரிகையாளர்களை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

தகவல் சேகரிக்கச் சென்றவர்களில், இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 26 பாலஸ்தீனர்கள் மற்றும் 4 பேர் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள், ஒருவர் லெபனான் பத்திரிகையாளர்கள் எனத் தெரிய வந்துள்ளது. 

இதுதவிர 8 பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளனர். 9 பேர் காணாமல் போனதாகவும் இஸ்ரேல் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுரைக் காமராஜா் பல்கலையில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் 95.06 சதவீதம் பெற்று மாநில அளவில் 4 வது இடம்

கழிவுநீா்க் கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்றக் கோரிக்கை

சின்னமனூரில் தொடா் மழை: திராட்சை கொடிகள் சேதம்

சின்னமனூரில் தொடா் மழை: திராட்சைக் கொடிகள் சேதம்

SCROLL FOR NEXT