முகப்பு
உலகம்

இஸ்ரேலிய வீரர் மீட்கப்பட்டது உண்மையா? மறுக்கும் ஹமாஸ்!

ஹமாஸின் பிடியில் இருந்த இஸ்ரேல் வீராங்கனை ஒருவரை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:19 PM
பகிர்:

காஸா பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம்  மேற்கொண்டு வரும் தரைவழி தாக்குதலில் பிணைக்கைதியாக ஹமாஸால் பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த பெண் வீராங்கனை ஒருவரை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை (அக்.30) இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,      “கடந்த இரவில் ஓரி மெக்டிஷ், ராணுவம் மேற்கொண்ட தரை வழி தாக்குதலால் மீட்கப்பட்டுள்ளார். இவர் அக்.7 தாக்குதலில் பிணைக்கைதியாக ஹமாஸால் கடத்தி செல்லப்பட்டார். ஓரிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் நலமுடன் உள்ளார். தற்போது குடும்பத்தினரைச் சந்தித்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நெதன்யாகு மீட்கப்பட்ட வீராங்கனை தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கடந்த சில நாள்களாக இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதிக்குள் தரை வழியாக ஊடுருவி வருகிறது.

இஸ்ரேலியர்கள், வெளிநாட்டவர்கள் உள்பட 230 பேர் பிணைக்கைதிகளாக ஹமாஸின் பிடியில் உள்ளனர்.

அக். 7 தாக்குதலில் கடத்தி செல்லப்பட்ட இவர்களில் நான்கு பேரை ஹமாஸ், கத்தார் அரசின் சமரச பேச்சுவார்த்தையால் விடுவித்தது. 

இந்த நிலையில், ராணுவத்தின் தரைவழி நடவடிக்கையால் வீராங்கனை ஒருவர் மீட்கப்பட்டுள்ளார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனை ஹமாஸ் குழு மறுத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →