உலகம்

கராச்சியில் 6ஆவது மாடியில் இருந்து பிறந்த குழந்தையை வீசிய தாய் கைது

கராச்சியில் 6ஆவது மாடியில் இருந்து பிறந்த குழந்தையை வீசிய தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

DIN

கராச்சியில் 6ஆவது மாடியில் இருந்து பிறந்த குழந்தையை வீசிய தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

பாகிஸ்தான், கராச்சியின் லியாகதாபாத் பகுதியில் உள்ள கட்டடத்தின் ஆறாவது மாடியில் இருந்து தான் பெற்றெடுத்த பெண் குழந்தையை தாய் ஒருவர் வீசி எறிந்துள்ளார். இந்த சம்பவத்தில் அந்த குழந்தை இறந்தது.

இதுதொடர்பாக குழந்தையின் தாய் மாமா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பிட்ட பெண் சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றவர். பெண்ணின் மன உறுதிப்பாடு கேள்விக்குறியாக உள்ளது.

எனவே அந்த பெண் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே சம்மந்தப்பட்ட பெண் போதைக்கு அடிமையானவர் என்று அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT