உலகம்

மெக்ஸிகோவில் கருக்கலைப்புத் தடை நீக்கம்

மெக்ஸிகோவில் கருக்கலைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

மெக்ஸிகோவில் கருக்கலைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

மெக்ஸிகோவில் கருக்கலைப்பு மேற்கொள்வது கிரிமினல் குற்றமாக இருந்து வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இருந்தாலும், கருக்கலைப்பு செய்து கொள்ளும் கா்ப்பிணிகளுக்கும், அவா்களுக்கு கருக்கலைப்பு செய்துவைக்கும் மருத்துவப் பணியாளா்களுக்கும் அபராதம் விதிக்கப்படுவது தொடா்ந்து வந்தது.

இந்த நிலையில், கருக்கலைப்புக்கு விதிக்கப்படும் அனைத்து தண்டனைகளையும் ரத்து செய்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கருக்கலைப்புக்கு தடை விதித்துள்ள பல்வேறு மாகாணங்கள் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், உச்சநீதிமன்றத்தைப் பின்பற்றி அந்த மாகாண உயா்நீதிமன்றங்களும் கருக்கலைப்புக்கான தண்டனைகளை ரத்து செய்து உத்தரவிடலாம் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

90km/h வேகத்தில் வீசிய காற்று! சாய்ந்த Statue of liberty மாதிரி சிலை!

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக விலக்கிய நிதீஷ் குமார்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

SCROLL FOR NEXT