ஆம்பர் லைன் - ராபின் ராபர்ட்ஸ் (இடமிருந்து வலம்) 
உலகம்

காதலியை மணந்த பிரபல பெண் தொகுப்பாளினி!

பிரபல பெண் தொகுப்பாளினியும் பெண் தொழிலதிபரும் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு கவனத்தை ஈர்த்துள்ளது.

DIN

அமெரிக்காவின் பிரபலமான ‘குட் மார்னிங் அமெரிக்கா’ தொலைக்காட்சித் தொடரை தொகுத்து வழங்குபவர்களில் பிரபலமானவர் ராபின் ராபர்ட்ஸ்(62). இந்த நிகழ்ச்சியின் பிரதான தொகுப்பாளினியான இவர் கடந்த செப்.8 ஆம் தேதி எளிமையான முறையில் திருமணம் செய்துள்ளார். அதில் என்ன சுவாரஸ்யம்? என நினைக்க வேண்டாம். அவர் மணம் புரிந்துகொண்டவரும் பெண்தான்!

ராபின் ராபர்ட்ஸ் கடந்த 2005 ஆம் ஆண்டு முகநூல் வாயிலாக தன் பாலின விருப்பத்தைக் கூறி பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதனைக் கண்ட பெண் தொழிலதிபரான ஆம்பர் லைன்(49), ராபினைச் சந்தித்துள்ளார்.

இருவருக்கும் இடையேயான புரிதலால் தங்கள் உறவை வளர்த்துள்ளனர். தோழிகளாக இருந்தவர்கள் ஒருகட்டத்தில், ஒருவருக்கு ஒருவர் நல்ல துணையாகவும் மாறியிருக்கின்றனர்.

குறிப்பாக, 2012 ஆம் ஆண்டு ராபின் ராபர்ட்ஸ் அரிய வகை ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை நோயினால் பாதிக்கப்பட்டபோது அவருக்கு நம்பிக்கையான துணையாக இருந்துள்ளார் ஆம்பர். இந்த நிகழ்வே இருவருக்கும் இடையேயான உறவை மேலும் வலுவாக்கியிருக்கிறது. 

தொடர்ந்து, ஆம்பர் லைன் 2021-ல் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கூடவே இருந்து தேற்றியுள்ளார் ராபின். இதுபோல் பல நிகழ்வுகளில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உற்ற தோழிகளாகவும் இணையாகவும் இருந்திருக்கின்றனர். 

இந்நிலையில், கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக உறவிலிருந்த இவர்கள் கடந்த செப்.8 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ஃபாரிங்டன்னில் எளிமையான முறையில் திருமணம் செய்துள்ளனர்.

இதை, தன் இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிவித்திருக்கிறார் ராபின் ராபர்ட்ஸ். மேலும், தன் பதிவில், “எங்கள் கொல்லைப்புறத்தில் வரவேற்பு நிகழ்வுக்குப் பின் மாயாஜாலமான திருமணம் நடைபெற்றது. இதை சாத்தியப்படுத்த உடனிருந்தவர்களை எப்போதும் நினைத்துப்பார்ப்போம். தேனிலவே இதோ வருகிறோம்” என தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT