உலகம்

ஸ்பெயினில் அசாதாரண வெப்ப அலை!

அதிகாரப்பூர்வ பதிவுகள் தொடங்கிய 62 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து, இந்த ஆண்டு ஸ்பெயினில் மூன்றாவது வெப்பமான நாளாக பதிவானதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

DIN

மாட்ரிட்: அதிகாரப்பூர்வ பதிவுகள் தொடங்கிய 62 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து, இந்த ஆண்டு ஸ்பெயினில் மூன்றாவது வெப்பமான நாளாக பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே வேளையில் நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக வெப்பநிலையானது 46.8 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்தது. இது சராசரி கோடை வெப்பநிலை இயல்பை விட 1.3 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளதாக ஸ்பானிஷ் வானிலை நிறுவனமான (ஏ.இ.எம்.இ.டி.) தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் (ஆகஸ்ட்) உலகின் மிகவும் வெப்பமான மாதம் மட்டுமல்லாமல், ஜூலை 2023 க்குப் பிறகு அதிகபட்ச இரண்டாவது வெப்பமான மாதமாகும் என்று உலக வானிலை ஆய்வு மையம் கடந்த வாரம் தெரிவித்தது.

1961 முதல் ஸ்பெயினின் பிரதான நிலப்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.6 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது. 

ஸ்பெயினில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலமானது, 2022 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அதே காலகட்டங்களை உள்ள வெப்பத்தை அது சமன் செய்துள்ளது. அதே வேளையில் ஸ்பெயினின் பெரும்பகுதி இன்னும் நீடித்த வறட்சியின் பிடியில் உள்ளது.

உண்மையில் ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஸ்பெயினின் கடலோர நீரானது முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக வெப்பமடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

SCROLL FOR NEXT