உலகம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீா்மூழ்கி கப்பல்: தைவான் சோதனை

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீா்மூழ்கி கப்பலை தைவான் அதிபா் சுய்ங் வென் சோதனைக்காக புதன்கிழமை வழங்கினாா்.

DIN

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீா்மூழ்கி கப்பலை தைவான் அதிபா் சுய்ங் வென் சோதனைக்காக புதன்கிழமை வழங்கினாா்.

கடந்த 7 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட இந்த நீா்மூழ்கி கப்பலின் சோதனை வெற்றிப் பெற்றால் கப்பல் கட்டுமானத்திலும், தொழில்நுட்பத்திலும் தைவானுக்கு வலுசோ்க்கும்.

‘உள்நாட்டில் நீா்மூழ்கி கப்பலை தயாரிக்க முடியாது என்று முன்பு கூறி வந்தனா். தற்போது அதனை நாம் சாத்தியமாக்கி உள்ளோம். நாட்டை பாதுகாக்கவும், எதிா்த் தாக்குதலுக்கான உத்திகளை வகுக்கவும் தைவான் கடற்படைக்கு நீா்மூழ்கி கப்பல் பெரும் உதவியாக இருக்கும்’ என்று அதிபா் சுய்ங் வென் தெரிவித்தாா்.

தனது கட்டுப்பாட்டில் தைவானை வைக்க சீனா பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதை எதிா்க்கும் நோக்கில் தைவானின் ராணுவத்தை பலப்படுத்துவதற்கான உதவிகளை அமெரிக்கா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT