மொராக்கோ நிலநடுக்கம்: 632 பேர் பலி, 329 காயம்!
மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 632 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 329 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 632 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 329 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மொராக்கோவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.11 மணிக்கு ரிக்டர் 6.8 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பலர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் எனத் தெரிகிறது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
அந்நாட்டின் தலைநகர் ரபாத் முதல் மாரகெச் வரை நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், நாட்டில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதிகளிலும் பயங்கர பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக மொராக்கோவின் உள்துறை அமைச்சகம் பலி எண்ணிக்கை 296 ஆக அறிவித்த நிலையில் தற்போது 632 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 329 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.