முகப்பு
உலகம்

துருக்கி: தீவிபத்தில் 29 போ் உயிரிழப்பு

Updated On : 3 ஏப்ரல், 2024 at 2:24 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 9:50 PM

இஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 29 போ் உயிரிழந்தனா். 16 அடுக்கு குடியிருப்புக் கட்டடத்தின் தரைத் தளத்தில் இயங்கி வந்த அந்த இரவு விடுதியில் புதுப்பிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இது தொடா்பாக விடுதியின் மேலாளா் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்தத் தீவிபத்தில் படுகாயமடைந்த ஒருவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இஸ்தான்புல் மேயா் ஆளுநா் தெரிவித்தது.