இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 
உலகம்

காஸாவில் 7 பணியாளர்கள் பலி: திட்டமிடப்படாதது என நெதன்யாகு விளக்கம்

PTI

ஜெருசலேம்: காஸாவில், இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் 7 பேர் பலியானதாக, உணவு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய உணவுக் கலைஞர் ஜோஸ் ஆன்ட்ரெஸால் நிறுவப்பட்ட உலக மத்திய சமையலறை என்ற உணவு அறக்கட்டளையில் இணைந்து காஸாவில் மக்களுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த ஆஸ்திரேலிய, போலந்து, பிரிட்டன், அமெரிக்க - கனடா இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் என ஏழு பேர் இஸ்ரேல் தாக்குதலில் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், உடனடியாக, தாக்குதல் நடந்தப் பகுதியில் உணவு வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தாக்குதல் திட்டமிடப்படாதது என்றும், தற்செயலாக நடைபெற்ற தாக்குதல், திட்டமிடப்படவில்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கம் அளித்துள்ளார்.

இந்த உணவு வழங்கும் பணியாளர்கள், கடல் வழியாக திங்கள்கிழமை, காஸாவுக்குள் நுழைந்தவர்கள், அத்தியாவசியமன உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், ஆனால், மாலைக்குள் திரும்பமுடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டதாகவும் அந்த உணவு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திங்கள்கிழமை இரவு நடத்தப்பட்டதாகவும், இது குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டிருப்பதோடு, இதற்கு முழு பொறுப்பேற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT