முகப்பு
உலகம்

ஜப்பான் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Updated On : 2 ஏப்ரல், 2024 at 11:53 PM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 10:35 PM

டோக்கியோ: ஜப்பானில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இவாட்டோ பகுதியில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.1 அலகுகளாகப் பதிவானது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் இவோட்டோ மற்றும் ஆவ்மோரி பகுதிகளில் உணரப்பட்டன. எனினும், இதனால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. அத்துடன், சுனாமி எச்சரிக்கையும் விடுவிக்கப்படவில்லை.