முகப்பு
நிவாரண பணியாளரின் உடலை மருத்துவமனையில் இருந்து எடுத்து செல்லும் பாலஸ்தீனர்கள்
உலகம்

நிவாரண பணியாளர்கள் ஆறு பேரின் உடல்கள் மீட்பு!

காஸாவிலிருந்து மீட்கப்பட்ட நிவாரண பணியாளர்களின் மரண உடல்கள்

உலகம்

நிவாரண பணியாளர்கள் ஆறு பேரின் உடல்கள் மீட்பு!

காஸாவிலிருந்து மீட்கப்பட்ட நிவாரண பணியாளர்களின் மரண உடல்கள்

Updated On : 3 ஏப்ரல், 2024 at 1:11 PM
நிவாரண பணியாளரின் உடலை மருத்துவமனையில் இருந்து எடுத்து செல்லும் பாலஸ்தீனர்கள்
பகிர்:

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிவாரண பணியாளர்கள் ஆறு பேரின் உடல்கள், காஸாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக எகிப்திய அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காஸாவின் ராபா எல்லையில் இருந்து எகிப்து நாட்டுக்குள் அவர்களின் உடல்கள் புதன்கிழமை அனுப்பப்பட்டுவிட்டதாக கஹெரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த ஏழு பேரில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்கள் மூவர், போலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்க-கனடா இரட்டை குடியுரிமை பெற்றவர் ஆகிய மூவர், பாலஸ்தீனிய ஓட்டுநர் ஒருவர் அடங்குவர்.

பாலஸ்தீனரின் உடல் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல், தவறுதலாக நிவாரண பணியாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் எங்கு தவறு நிகழ்ந்தது என்பது குறித்து சுயாதீன விசாரணையை மேற்கொள்ள ஆணையிடுவதாகவும் தெரிவித்தது.

‘வேர்ல்டு சென்ட்ரல் கிட்சன்’ என்கிற சேவை நிறுவனம், திங்கள்கிழமை நிவாரண உணவுப் பொருள்களை ஏற்றிவந்த கப்பலை இந்த நிகழ்வினால் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →