FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது! ஈரான் அதிரடி!

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

Updated On : 2 மார்ச் 2026, 12:59 pm IST
துபையில், ஈரான் தாக்குதல். - படம்: AP
பகிர்:

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் பாதுகாப்புத் தலைவர் புதிய கோரிக்கையை வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில், ஈரான் பாதுகாப்புத் தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், திங்கள்கிழமை காலை குவைத்தில் அமெரிக்க எஃப்-15 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

குவைத்தில் அமெரிக்க எஃப்-15 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விடியோவையும் இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஈரான் புதிய முயற்சியை மேற்கொண்டு வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.

அதேபோல, ”ஈரான் ராணுவம் போரை கைவிட்டு சரணடைய வேண்டும், இல்லையென்றால் அதிக பலியை சந்திக்க நேரிடும். ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், எந்தச் சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என்று ஈரான் பாதுகாப்புத் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

summary

Iran has categorically stated that it will not hold any compromise talks with the United States regarding the ceasefire.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments