டெய்லர் ஸ்விஃப்ட் 
உலகம்

உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்ற பாடகி!

பாப் இசையில் பில்லியனியர்: டெய்லர் ஸ்விப்ட் போர்ப்ஸ் பணக்காரர் வரிசையில்

இணையதளச் செய்திப் பிரிவு

போர்ப்ஸ் 2024 பில்லியனியர் பட்டியலில் அமெரிக்கா பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் இடம்பெற்றுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் நிறுவனம், “எராஸ் டூர் இசை நிகழ்வில் ஈட்டிய, வரிக்கு பிந்தைய வருமாய் 190 மில்லியன் அமெரிக்க டாலர், பில்லியனியர் பட்டியலில் டெய்லரை இணைத்துள்ளது. பாடல் எழுதுதல் மற்றும் இசை நிகழ்வுகள் மூலம் மட்டுமே வருவாய் ஈட்டிய முதல் நபர் இவர்” என டெய்லர் ஸ்விப்டைக் குறித்து தெரிவித்துள்ளது.

டெய்லரின் நிகர சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்படுகிறது. (இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூ. 9,169 கோடி)

அவருடன் பாடகி ரிஹானா, ஓப்ரா வின்பிரே மற்றும் ஸ்டார் வார்ஸ் இயக்குநர் ஜியார்ஜ் லுகாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நட்சத்திர பில்லியனியர் வரிசையில் ஜியார்ஸ் லுகாஸ் 5.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு முதலிடத்தில் உள்ளார்.

டெய்லரின் 11வது ஆல்பம் ஏப்ரலில் வெளியாகவுள்ளது. மே மாதம் முதல் தனது எராஸ் டூர் பயணத்தை மீண்டும் தொடங்கவுள்ளார் டெய்லர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தமிழக எம்.பி.க்கள் ஆதரவளிக்க வேண்டும்: இபிஎஸ், நயினார் நாகேந்திரன்

ஆவணி மாதப் பலன்கள் - கன்னி

வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார்!

ஆவணி மாதப் பலன்கள் - சிம்மம்

ஆவணி மாதப் பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT