FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

எவ்ளோ பெரிசு...

உலகில் ஏராளமான புதுப்புது கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

Updated On : 22 பிப்ரவரி 2026, 4:06 am IST
பகிர்:

உலகில் ஏராளமான புதுப்புது கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மிக உயர்ந்த கட்டடம் ஒன்று கட்டப்பட்டால், அதற்குப் போட்டியாக அதனை விஞ்சும் வகையில் இன்னொரு பெரிய கட்டடம் கட்டப்படுகிறது. மிகப் பெரிய, விலை உயர்ந்த கட்டடங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

அப்ராஜ் அல் பைத், மெக்கா

சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள விண்ணுயரக் கட்டடமான இது 2012-இல் கட்டி முடிக்கப்பட்டது. உலகின் மிக உயரமான கடிகாரக் கோபுரமும் இதுதான்.

Advertisement

Advertisement

1,972 அடி உயரத்தில் ஏழு கோபுரங்களைக் கொண்டது. பல உயரமான ஹோட்டல்கள், ஷாப்பிங் மால், கண்காட்சிகளைக் கொண்டுள்ளது. ஒரு லட்சம் பேர் தங்கும் அளவுக்கு வசதிகளைக் கொண்டது. இதன் மதிப்பு15 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் ரூ. 1.2 லட்சம் கோடி.

மஸ்ஜித் அல் ஹராம், மெக்கா

மெக்காவில் உள்ள மிகப் பெரிய, புனிதமான பள்ளிவாசல். ஹஜ், உம்ரா யாத்திரை மக்களுக்கு முக்கியமானது. பள்ளிவாசலின் மையத்தில் புனித காபா உள்ளது. சம்சம் கிணறு, இப்ராஹிம் நின்ற இடம், சஃபா-மர்வா மலைகளும் உள்ளன.

அவ்வப்போது உள்ளே கட்டப்பட்டு வருகிறது. இதுவரை இந்திய மதிப்பில் ரூ. 8.3 லட்சம் கோடி கட்டுமானத்துக்குச் செலவிடப்பட்டுள்ளது.

புதிய மினரெட்டு, நிலத்தடி சுரங்கப் பாதை, போக்குவரத்து வசதி உள்ளிட்டவை புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. பல லட்சம் பேர் ஒரே நேரத்தில் பள்ளிவாசலைப் பயன்படுத்தும் அளவுக்கு வசதிகள் உள்ளன.

மெரினா பே காண்டஸ், சிங்கப்பூர்

மெரினா வளைகுடாவையொட்டி அமைந்துள்ள சிங்கப்பூரின் அண்மைக்கால அடையாளமாக இருக்கும் இந்த ஆடம்பர ரிசார்ட்டில் 55 மாடி கோபுரங்கள் உள்ளன. மூன்று முக்கிய கோபுரங்கள் உள்நோக்கி 27 டிகிரி வரை சாய்ந்து, மேலே 340 மீ. நீளமுள்ள ஸ்கைபார்க் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. 57-ஆவது மாடியில் 150 மீட்டர் நீளமுள்ள நீச்சல் குளம் உள்ளது. இங்கிருந்து சிங்கப்பூரின் அழகை ரசிக்கலாம். கேசினோ பேஷன் ஷாப்பிங் மால், அருங்காட்சியகம் உள்ளிட்ட பல இங்குள்ளன.

2010-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இதன் இன்றைய மதிப்பு சுமார் 8 பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் ரூ.72 ஆயிரம் கோடி.

சர்வதேச நிதி மையம், ஹாங்காங்

தடையற்ற சந்தைப் பொருளாதாரம், வலுவான நிதிச் சந்தை, சீனாவுக்கான முக்கிய நுழைவு வாயிலாக ஹாங்காங் இருப்பதால், 1993-இல் இந்தக் கட்டடம் தொடங்கப்பட்டது. 2003-இல் கட்டி முடிக்கப்பட்டது. மேல் தளத்தில் உலகின் முக்கிய உலகளாவிய நிதி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இன்றைய மதிப்பு 6.4 பில்லியன் அமெரிக்க டாலர்.

சோஃபி மைதானம்

தெற்கு கலிபோர்னியாவின் கடற்கரைப் பகுதியில் எழுந்துள்ள மைதானம். 2020-இல் கட்டி முடிக்கப்பட்டபோது, 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவானது. 3.1 மில்லியன் சதுர அடியில் கட்டப்பட்ட இந்த மைதானமானது சூப்பர் பௌல், 2028-இல் ஒலிம்பிக்ஸ் போட்டி நடத்த கட்டப்பட்டதாகும். போட்டிகள், கச்சேரிகள், பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகளும் இங்கு நடக்கின்றன. 70 ஆயிரம் பேர் அமரலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments