முகப்பு
உலகம்

காஸா உயிரிழப்பு 33,137-ஆக உயா்வு

Updated On : 6 ஏப்ரல், 2024 at 10:51 PM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 9:50 PM

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 33,137-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46 போ் உயிரிழந்தனா்; 65 போ் காயமடைந்தனா்.

Advertisement

இத்துடன், அந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினா் கடந்த அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33,137-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 75,815 காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் அமைப்பினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அதையடுத்து அந்த அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிரமாக தாக்குதல் நடத்திவருகிறது.