உலகம்

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள்: 6 பாதுகாப்புப் படையினா், 12 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

பலுசிஸ்தானில் வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை நடைபெற்ற வெவ்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் ஆறு பாதுகாப்புப் படையினரும் 12 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

DIN

குவெட்டா: பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மற்றும் பலுசிஸ்தானில் வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை நடைபெற்ற வெவ்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் ஆறு பாதுகாப்புப் படையினரும் 12 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

கைபா் பக்துன்கவா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தின் கோட் சுல்தான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில், எட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான பல நடவடிக்கைகளிலும், பொதுமக்களை குறிவைத்து கொலை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே, சனிக்கிழமை வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று லக்கி மார்வாட்டில் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு சம்பவங்களில் ஆயுதமேந்திய கும்பலால் ஒரு டிஎஸ்பி மற்றும் இரண்டு போலீசார் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் காயமடைந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே இரவில் இரண்டாவது நடந்த தாக்குதலில், ஸ்ரா தர்கா பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே அடையாளம் தெரியாதவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு போலீசார் கொல்லப்பட்டார்.

பஜார் மாவட்டத்தின் மாமுண்ட் தாலுகாவில் சனிக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒரு காவல் துறை அதிகாரி உயிரிழந்தாா். மற்றொருவர் காயமடைந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றத்தில் மறியலில் ஈடுபட்ட 62 பேர் மீது வழக்கு

தவெகவின் சமத்துவ கிறிஸ்துமஸ்! விஜய் கொண்டாட்டம்!

தேர்தல் நன்கொடை பத்திரங்கள் ரத்து! மாற்றி யோசித்த பாஜக, ரூ.6088 கோடி வசூலித்து சாதனை!

மெரினாவில் இரவுநேரக் காப்பகம்! உதயநிதி திறந்துவைத்தார்!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT