இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0 ஆகப் பதிவு!
மேற்கு பப்புவாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான மேற்கு பப்புவாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட தகவலில்,
ஜகார்த்தா நேரப்படி காலை 7.2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவானதாகத் தெரிவித்துள்ளது.
Advertisement
ரான்சிகி நகருக்கு தென்கிழக்கே 46 கி.மி தொலைவிலும், கடலுக்கு அடியில் 11 கி.மீ ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை வெளியிடவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.