முகப்பு
உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Updated On : 10 ஏப்ரல், 2024 at 2:15 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 9:15 PM

ஜகாா்த்தா: இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்த நாட்டின் ஹல்மஹேரா தீவுக்கு அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த அது ரிக்டா் அளவுகோலில் 6.6 அலகுகளாகப் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

Advertisement

புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.