இம்ரான் கான் 
உலகம்

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

DIN

சிறையில், மனைவி புஷ்ரா பீபிக்கு, கழிப்பறை சுத்திகரிப்பான் கலந்த உணவு வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

மிகக் கொடிய ரசாயனம் கலந்த உணவை உண்டதால், அவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பல்வேறு வழக்குகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் அரசியல்வாதியுமான இம்ரான் கான், அடியலா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஊழல் வழக்கு விசாரணையின்போது, ராவல்பிண்டி நீதிமன்றத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறையில் உள்ள புஷ்ராவுக்கு ஷிஃபா சர்வதேச மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ள மருத்தவர் பரிந்துரைத்தபோதும், பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில்தான் பரிசோதனை செய்ய வேண்டும் என சிறைத் துறை நிர்வாகம் கெடுபிடி காட்டுகிறது.

முன்னதாக, தனக்கு உணவில் விஷம் வைக்கப்பட்டதா என்பதை பரிசோதிக்குமாறு புஷ்ரா, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவர் சட்டத்தை மீறி இம்ரான் கானை திருமணம் செய்துகொண்டதாகவும், ஊழல் வழக்கின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலக்கு மட்டும்... சிம்ரன் சௌத்ரி

மாடர்ன் புறா... பிரியங்கா ஜவல்கர்

மும்பை: சொகுசு ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

போப் பதினான்காம் லியோவின் முதல் வெளிநாடு பயணம்! எங்கு தெரியுமா?

வலையில் சிக்கிய 150 கிலோ எடை ஆமை: கடலில் விட்ட மீனவர்

SCROLL FOR NEXT