கமலா ஹாரிஸின் இன அடையாளம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த முன்னாள் அதிபர் டிரம்ப்.
அமெரிக்காவின் சிகாகோவில் நேற்று (ஜூலை 31) நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ``கமலா ஹாரிஸ் ஓர் இந்தியரா? அல்லது கறுப்பினத்தவரா? அவர் எப்போதும் இந்திய பாரம்பரியத்தையே சேர்ந்தவர்; அவர் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்தார்.
இந்தியராக இருந்தவர், திடீரென கறுப்பின நபராக மாறிவிட்டார். அவர் எல்லா வகைகளிலும் இந்தியராக இருந்தார்; திடீரென ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார்” என்று கூறியுள்ளார்.
கமலா ஹாரிஸ் மீதான தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்து, கொள்கை நிலைப்பாட்டில் கவனம் செலுத்துமாறு குடியரசு கட்சித் தலைவர்கள் டிரம்பை வலியுறுத்திய போதிலும், டிரம்ப் அவர்களின் பேச்சை மறுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஜோ பைடன் கடந்த ஜூலை 21ஆம் தேதியில் அறிவித்தார்.
இதனையடுத்து, அவருக்கு பதிலாக ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ், அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிடுகிறார்.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், டிரம்பை விட பைடனுக்கு கறுப்பினத்தவர்கள் 92% வாக்களித்திருந்த நிலையில், இந்த முறை கறுப்பினத்தவர்களின் வாக்குகளைப் பெறுவதில் டிரம்ப் அதிக ஈடுபாடு கொள்ளுவதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.