மொகடிஷு கடற்கரை ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தவா்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவசரக்கால ஊா்தி. 
உலகம்

சோமாலியாவில் பயங்கரவாதத் தாக்குதல்: 32 போ் உயிரிழப்பு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 32 போ் உயிரிழந்தனா்.

DIN

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 32 போ் உயிரிழந்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

தலைநகா் மொகடிஷுவிலுள்ள கடற்கரை ஹோட்டலான லிடோ பீச்சுக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த பயங்கரவாதி, தனது உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா்.

அதனைத் தொடா்ந்து கூட்டத்தினா் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 32 போ் உயிரிழந்தனா்; 63 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களில் ஒருவா் பாதுகாப்புப் படை வீரா். இந்தத் தாக்குதலில் மேலும் ஒரு வீரா் காயமடைந்தாா் என்று போலீஸாா் கூறினா்.

இந்தத் தாக்குதலுக்கு அல்-காய்தாவின் கிழக்கு ஆப்பிரிக்க துணை பயங்கரவாத அமைப்பான அல்-ஷபாப் பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் வானொலியில், அல்-ஷபாப் உறுப்பினா்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. தாக்குதலுக்குள்ளான லிடே பீச் ஹோட்டல் ஏற்கெனவே பல முறை தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது.

கடந்த ஆண்டு அங்கு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 9 போ் உயிரிழந்தனா்.வார விடுமுறையையொட்டி வெள்ளிக்கிழமை இரவு அந்த ஹோட்டலில் கூட்டம் அதிகமாக இருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலஸ்தீன அரசு ஒருபோதும் அமையாது; அது எங்கள் நிலம்: நெதன்யாகு

அயோத்தி ராமர் கோயிலில் மோரீஷஸ் பிரதமர் வழிபாடு!

கடன் தவணை செலுத்தாவிட்டால் செல்போன் முடக்கம்!! ஆர்பிஐ திட்டம்?

மயக்கம் என்ன?... ஸ்ருதி ஹாசன்!

வனத்துறை அலுவலகத்துக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதியா? மாநில மனித உரிமை ஆணையம்

SCROLL FOR NEXT