வெப்ப பாதிப்பு 
உலகம்

தென் கொரியாவில் வெப்ப தாக்குதலுக்கு 1,546 பேர் பாதிப்பு!

வெப்பம் தாக்குதல் தொடர்பான நோய்களுக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

IANS

தென் கொரியாவில் வெப்பம் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,546 ஆக உயர்ந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சியோலின் தென்கிழக்கில் 64 கி.மீ தொலைவில் உள்ள யோஜூவில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டியது. இது கடந்த 2018-க்குப் பிறகு பதிவான அதிகப்படியான வெப்பம் என்று கூறப்படுகிறது.

வெப்பம் தாக்குதல் தொடர்பான நோய்களுக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,35,880 கோழிகள் உள்பட 2,35,880 கால்நடைகளும் பலியாகியுள்ளன.

இந்த வெப்ப அலையானது அடுத்த 10 நாள்களுக்கு தொடரும் என்றும், பகல் நேரத்தில் சராசரியை விட வெப்பம் கூடுதலாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 30 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த வாரம் கடுமையான வெப்பநிலை நிலவும் என்பதால் மக்கள் பிற்பகல் 2 மணிக்கு மேல் வெளியே வருவதைத் தவிர்க்குமாறும், குளிர்ச்சியுடன் வைத்திருக்குமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் நீ... அர்ச்சனா கௌதம்

சும்மா இரு மனமே... நந்திதா ஸ்வேதா!

நீலகிரி, கோவைக்கு நாளை(ஆக. 5) ரெட் அலர்ட்!

சப்தமின்றி தனிமையில்... கர்விதா சத்வானி

தமிழ்நாடுதான் இந்திய மின் வாகன உற்பத்தியின் Capital - முதல்வர் Stalin

SCROLL FOR NEXT