FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பிரேஸில் விமான விபத்து: 62 பேர் பலி

விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்து..

Updated On : 10 ஆகஸ்ட் 2024, 1:49 am IST
விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. - X
பகிர்:

பிரேஸில் நாட்டில் 62 பயணிகளுடன் சென்ற விமானம் குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக அந்த நாட்டு அதிபா் லூலா டாசில்வா தெரிவித்துள்ளார்.

சா பாலோ சா்வதேச விமான நிலையமான குவாருல்ஹோஸுக்கு 58 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளா்களுடன் சென்ற தங்களின் விமானம் விபத்துக்குள்ளானதாக வோபாஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியது.

Advertisement

Advertisement

வின்ஹீடோ நகா்ப் பகுதியில் விபத்துக்குள்ளான விமானம் கீழே விழுந்ததாக அந்த நகரின் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறை குழுக்கள் விரைந்துள்ளன.

வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியதில் புகை வெளியாவதைப் போன்ற விடியோ காட்சிகள் பிரேஸில் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டன. மற்றொரு விடியோவில் வானில் பறந்த விமானம் நிலைதடுமாறி செங்குத்தாக தரையில் விழும் காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன.

தெற்கு பிரேஸிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அந்த நாட்டு அதிபா் லூலா டாசில்வா, விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறி அங்கு கூடியிருந்த பொதுமக்களை ஒரு நிமிடம் அமைதியாக எழுந்து நிற்குமாறு கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments