மாலத்தீவுக்கு இந்தியா அளித்து வரும் உதவிகளுக்கு மாலத்தீவு அதிபர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மாலத்தீவில் 110 மில்லியன் டாலர் மதிப்பிலான குடிநீர் மற்றும் சுகாதாரத் திட்டத்துக்கு சர்வதேச ஒத்துழைப்புடன் இந்தியா நிதியுதவி அளித்து உதவியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், அங்குள்ள 28 தீவுகள் பயனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 3 நாள் அரசுமுறை பயணமாக மாலத்தீவு சென்றடைந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அந்நாட்டின் அதிபர் மளிகையில் நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சியில் குடிநீர் திட்டத்தை காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் மாலத்தீவில் மேற்கண்ட தீவுகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுமெனவும், அங்குள்ள சுமார் 28,000 மக்கள் இத்திட்டத்தால் பயனடைவர் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், மாலத்தீவுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் இந்திய அரசுக்கும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி. பாதுகாப்பு, மேம்பாடு, கலாசாரா பகிர்வு ஆகிவற்றில் உள்ள ஒத்துழைப்பால் நம் நாடுகளை நெருக்கமாக்கவும், வலுப்படுத்துவதற்காகவும் இந்தியா-மாலத்தீவு இடையேயான கூட்டாண்மை தொடரும் எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.