கோப்புப் படம் 
உலகம்

துருக்கி வான்வழித் தாக்குதலில் 17 பேர் பலி!

துருக்கி நடத்திய வான்வழித் தாக்குதலில் இராக்கின் குர்திஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த 17 பேர் பலி.

DIN

துருக்கி நடத்திய வான்வழித் தாக்குதலில் இராக்கின் குர்திஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை இன்று (ஆக. 12) அறிவித்தது.

ஆபரேஷன் கிளா-லாக் என்னும், வடக்கு இராக் எல்லை மீதான நேர வரம்பற்ற துருக்கி படையினரின் ஆயுத நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 1980-களில் இருந்து துருக்கியில் பிரிவினைவாதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குா்திஸ்தான் மக்கள் கட்சி (பிகேகே) அந்த நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.

அந்த அமைப்புக்கு சிரியாவிலும், இராக்கிலும் செயல்பட்டு வரும் குா்துப் படையினா் உதவி அளிப்பதாக துருக்கி கூறி வருகிறது. இதன் காரணமாக, அந்தப் படையினரின் நிலைகள் மீது துருக்கி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் வடக்கு இராக்கின் குர்திஸ்தான் மக்கள் கட்சியினரின் மறைவிடங்கள், தளங்கள் மீது துருக்கி படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதில் 17 பேர் இறந்ததாக இராக் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் கிளா-லாக்கை 2022 ஏப்ரல் மாதத்தில் துருக்கி படையினர் தொடங்கினர். அதுமுதல் மெடினா, ஸாப், அவாசின் - பாஸ்யன் ஆகிய துருக்கி எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

SCROLL FOR NEXT