உலகம்

அமெரிக்கா: நூற்றுக்கணக்கான பெண்களை விடியோ எடுத்த இந்திய மருத்துவர் கைது

ஒரு ஹார்ட் டிஸ்க்கில் மட்டும் 13000 விடியோக்கள்

DIN

அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்த இந்தியர், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

ஓமெர் ஏஜாஸ் என்பவர், கடந்த 2011 ஆம் ஆண்டில், வேலை விசா மூலம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். ஆனால், அங்கேயே குடியுரிமையும் பெற்று, மிசிகனில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ஓமெர் பல ஆண்டுகளாக சிறுமிகளையும் பெண்களையும், அவர்களுக்கே தெரியாமல் நிர்வாணமாக புகைப்படமும் விடியோவும் எடுத்து வந்துள்ளார். ஓமெரின் இந்த செயல் குறித்து அறிந்த ஓமெரின் மனைவி, காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, ஓமெரின் வீடு, அறை, மருத்துவமனை, மருத்துவமனையின் அறை, உடை மாற்றும் அறை, குளியலறைகள் உள்ளிட்ட பல இடங்களில் கேமராவை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

மேலும், கணினிகள், தொலைபேசிகள், இதர சாதனங்களைச் சோதனை செய்தபோது, ஒரு ஹார்ட் டிரைவில் 13,000 வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி, கிளவுட் ஸ்டோரேஜிலும் வீடியோக்களைப் பதிவேற்றியிருக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, ஓமெர் கைது செய்யப்பட்டார். மேலும், 2 மில்லியன் டாலர் அளித்தால் மட்டுமே ஜாமின் வழங்கப்படும் என்ற நிபந்தனையின்கீழ் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக தொடா் மழை

ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்

மழைநீா் செல்ல கிளைக் கால்வாய்கள் சீரமைப்பு

போளூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணி

SCROLL FOR NEXT