விபத்துக்குள்ளான பேருந்து படம் | எக்ஸ்
உலகம்

ஈரானில் பேருந்து கவிழ்ந்து பாகிஸ்தான் யாத்ரீகர்கள் 28 பேர் பலி

ஈரானில் பேருந்து கவிழ்ந்து பாகிஸ்தான் யாத்ரீகர்கள் 28 பேர் பரிதாபமாக பலியாகினர்.

DIN

ஈரானில் பேருந்து கவிழ்ந்து யாத்திரை சென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த யாத்ரீகர்கள் 28 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், இந்த விபத்தில் 23 பேர் காயமடைந்தனர்.

மத்திய ஈரானிய மாகாணமான யாஸ்டில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் பேருந்து பிரேக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஈரானிய போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக 11 பெண்களும், 17 ஆண்களும் பரிதாபமாக பலியாகினர். காயமடைந்தவர்களில் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் தற்போது மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக யாஸ்ட் மாகாண மேலாண்மை இயக்குநர் தெரிவித்தார்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ எங்களின் சகோதரத்துவமிக்க அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். ஈரானில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிவாரணம், சிகிச்சைப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈராக்கின் கர்பலா மாகாணத்தில் அர்பைன் யாத்திரையில் லட்சக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளனர். ஷியா இஸ்லாமின் முக்கியமானவரும், முகமது நபியின் பேரனுமான இமாம் ஹுசைன் பின் அலியின் தியாகத்தைக் குறிக்கும் நிகழ்விற்காக இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT