இலங்கையில் வருகிற செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தலில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் ஒருவர் காலமானார்.
இலங்கையின் வடமேற்கு புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் இத்ரூஸ் முகமது இலியாஸ் (79) நேற்று (ஆக 22) இரவு மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மரணமடைந்த இத்ரூஸ் முகமது இலியாஸ் 1990 ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தின் வடக்கு மாவட்டத்திலிருந்து இலங்கையில் மொத்தமுள்ள 9 சதவீத முஸ்லிம்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் முன்னாள் அதிபரான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்காவின் அரசில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இதேபோல, 1994 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது, அப்போதைய எதிர்க்கட்சியின் பிரதான போட்டியாளர் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருக்கு பதிலாக அவரது மனைவியின் பெயர் வாக்குச் சீட்டில் இடம் பெற்றிருந்தது.
இலியாஸ் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தார். அவர் இறந்தாலும் வாக்குச் சீட்டில் இருந்து பெயர் நீக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபருக்கான தேர்தல் போட்டியில் தற்போதைய இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதசா மற்றும் மார்க்சிஸ்ட் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.