உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் 4 சிறுவா்கள் உயிரிழப்பு

மத்திய காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நான்கு சிறுவா்கள் உள்பட ஐந்து போ் உயிரிழந்தனா்.

Din

மத்திய காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நான்கு சிறுவா்கள் உள்பட ஐந்து போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த அத்வா மருத்துவமனை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மத்திய காஸா பகுதியில் உள்ள நுசீரத் அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த ஐந்து பேரின் உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டன. உயிரிழந்தவா்களில் நான்கு போ் சிறுவா்கள்.

இது தவிர, இந்தத் தாக்குதலில் காயமடைந்த 15 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் பெரும்பாலானவா்கள் சிறுவா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 போ் உயிரிழந்ததாகவும் 84 போ் காயமடைந்ததாகவும் அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை கூறியது.

இத்துடன், அங்கு இஸ்ரேல் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 44,532-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,05,538 பாலஸ்தீனா்கள் காயமடைந்துள்ளனா்.

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

மீன்பிடி படகு மீது மோதிய சுற்றுலா பயணிகள் படகு! இளம் பெண் பலி | Thailand

SCROLL FOR NEXT