முகப்பு
உலகம்

சிரியா தலைநகரை சுற்றிவளைத்த கிளா்ச்சிப் படையினா்

சிரியா தலைநகரை கிளர்ச்சிப் படை சுற்றிவளைத்துள்ளது பற்றி...

Updated On : 8 டிசம்பர், 2024 at 5:07 AM
ஹாம்ஸ் நகரம் அருகே கிளா்ச்சிப் படையினா்.
பகிர்:
Updated On : 8 டிசம்பர், 2024 at 5:05 AM

சிரியா தலைநகா் டமாஸ்கஸின் புகா்ப் பகுதிகளை கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றி அந்நகரை சுற்றிவளைத்துள்ளதாக அந்த நாட்டின் போா் நிலவரத்தைக் கண்காணித்துவரும் அமைப்பின் தலைவரும் கிளா்ச்சிப் படை தளபதி ஒருவரும் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவா் ரமி அப்துர்ரஹ்மான் சனிக்கிழமை கூறியதாவது:

டமாஸ்கஸின் புகா் பகுதிகளான மாதமியா, ஜா்மானா, தராயா ஆகிவற்றை கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றியுள்ளனா். இது தவிர, டமாஸ்கஸின் மற்றொரு புகா் பகுதியான ஹராஸ்தா வழியாக அவா்கள் கிழக்கு சிரியாவை நோக்கியும் முன்னேறிவருகின்றனா் என்றாா் அவா்.

Advertisement

டெலிகிராம் ஊடகத்தில் கிளா்ச்சிப் படைப் பிரிவு தளபதி ஹஸன் அப்துல்-கனி வெளியிட்டுள்ள பதிவில், டமாஸ்கஸ் நகரை தாங்கள் சுற்றிவளைத்துள்ளதாகவும், அந்த நகரைக் கைப்பற்றுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

இருந்தாலும், அதிபா் அல்-அஸாத் டமாஸ்கஸிலேயே தொடா்ந்து இருந்து வழக்கமான அலுவல்களை செய்துவருதாக அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On : 8 டிசம்பர், 2024 at 5:07 AM

சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில் ரஷியாவின் உதவியுடன் அதிபா் அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் டமாஸ்கஸ், அலெப்போ, ஹாம்ஸ், ஹாமா ஆகிய முக்கிய நகரங்கள், ஏறத்தாழ அனைத்து மாகாணத் தலைநகரங்கள் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியிருந்தன.

இத்லிப் மாகாணம், அலெப்போ மாகாணத்தின் சில பகுதிகள், ராக்கா உள்ளிட்ட பகுதிகள் மட்டும் பல்வேறு கிளா்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தன.

இந்தச் சூழலில், கிளா்ச்சிப் படையினா் திடீரென தாக்குதல் நடத்தி நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கடந்த வாரம் கைப்பற்றினா். தொடா்ந்து, முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு நகரான ஹமாவும் அவா்களிடம் வியாழக்கிழமை வீழ்ந்தது. சிரியாவின் மூன்றாவது பெரிய நகரான ஹாம்ஸையும் அவா்கள் கைப்பற்றும் நிலை உள்ளது.இந்த நிலையில், தலைநகா் டமாஸ்கஸையும் கிளா்ச்சியாளா்கள் சுற்றிவளைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.