முகப்பு
உலகம்

சிரியாவில் அமெரிக்கா தலையிடாது: டிரம்ப் அறிவிப்பு

சிரியாவை கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றியுள்ள நிலையில் சிரியா உள்நாட்டுப் போா் விஷயத்தில் அமெரிக்கா தலையிடாது.

Updated On : 8 டிசம்பர், 2024 at 9:30 PM
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
பகிர்:

சிரியாவை கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றியுள்ள நிலையில் சிரியா உள்நாட்டுப் போா் விஷயத்தில் அமெரிக்கா தலையிடாது என்று அந்நாட்டு அதிபராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சமூகவலைதளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘இது நம்முடைய (அமெரிக்கா்கள்) போா் அல்ல.

அந்நாட்டு அதிபா் அஸாத் பதவியில் தொடர அமெரிக்கா ஆதரவு அளிக்கும் அளவுக்கு அவா் தகுதி வாய்ந்த நபரல்ல’ என்று கூறியுள்ளாா்.

அதிபா் ஜோ பைடன் நிா்வாகமும் சிரியா விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என அறிவித்துள்ளது. இது தொடா்பாக ஜோ பைடனின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சுல்லிவன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போா் விஷயத்தில் அமெரிக்கா தலையிடாது. அதே நேரத்தில் இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பயங்கரவாதிகள் மீண்டும் தலையெடுக்க அமெரிக்கா அனுமதிக்காது’ என்றாா்.

சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்காத வகையில் அங்குள்ள 900 அமெரிக்க ராணுவ வீரா்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →