இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 
உலகம்

ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும் இஸ்ரேல் பிரதமர்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வழக்கு விசாரணைக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

DIN

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன் மீதான ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு இன்று முதல்முறையாக நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

இஸ்ரேலின் நீண்டகால பிரதமராக உள்ள பெஞ்சமின் நெதன்யாகு மீது கடந்த 2020 ஆம் ஆண்டு லஞ்சம், ஊழல் மற்றும் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுகளின் பேரில் 3 வழக்குகள் பதியப்பட்டு விசாரணை தொடங்கியது. இது அரசியல் காரணங்களுக்காக சொல்லப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் என அவர் அதனை மறுத்தார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவாக இந்த வழக்கு விசாரணை 2 மாதங்கள் நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் டிச. 2023 இல் தொடங்கியது.

நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யாவ் காலண்ட் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அக். 8, 2023 முதல் மே 20, 2024 வரை செய்த போர் குற்றங்கள் தொடர்பாக கைது செய்ய ஆணை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை, நவ. 21 அன்று வெளியிட்டது. இது, நெதன்யாகு மீதான உள்நாட்டு வழக்கு விசாரணையை மேலும் சிக்கலாக்கியது.

இதையும் படிக்க |

இதனைத் தொடர்ந்து, நவ. 24 அன்று நெதன்யாகுவின் சட்டக்குழுவினர் வைத்த கோரிக்கையை ஏற்று அவரின் விசாரணையை 15 நாள்கள் தள்ளி வைக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. பின்னர், விசாரணையை மேலும் தள்ளி வைக்குமாறு 12 அமைச்சர்கள் வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிரகரித்தது.

இந்த நிலையில் பாதுகாப்புக் கருதி இந்த வழக்கு விசாரணை தெல் அவிவ் மாவட்ட நீதிமன்றத்தின் கீழ் தளத்தில் உள்ள அறையில் இன்று நடைபெற உள்ளது. நெதன்யாகு நேரில் ஆஜராக உள்ளார். அடுத்த 2 வாரங்களுக்கு, வாரத்திற்கு 3 முறை நெதன்யாகு சாட்சியங்கள் அளிப்பார் என்று இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிரிமினல் குற்றங்களுங்காக தண்டனை விதிக்கப்படும் முதல் இஸ்ரேல் பிரதமராக நெதன்யாகு இருப்பார் என்றும், அவருக்குக் கடுமையான சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

SCROLL FOR NEXT