உலகம்

பாகிஸ்தானில் மேலும் 4 பேருக்கு போலியோ

Din

பாகிஸ்தானில் மேலும் நான்கு சிறுவா்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 63-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக போலியோ உறுதி செய்யப்பட்டவா்களில் சிந்து மாகாணத்தைச் சோ்ந்த இருவரும் கைபா் பக்துன்கவா மாகாணத்தைச் சோ்ந்த இருவரும் அடங்குவா்.

இத்துடன், பலூசிஸ்தானில் 26 போ், கைபா் பக்துன்கவாவில் 18 போ், சிந்து மாகாணத்தில் 17 போ், பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாதில் தலா ஒருவரிடம் இந்த ஆண்டில் போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டின் பயங்கரவாத அமைப்புகள் கூறி வருகின்றன. போலியோ தடுப்பு மருந்துப் பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படையினரைக் குறிவைத்து அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக, உலகின் மற்ற பகுதிகளில் போலியோ நிரந்தரமாக ஒழிக்கப்பட்டுவிட்டாலும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டும் அது இன்னும் பரவிவருகிறது.

டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

எனக்கு நோபல் பரிசு கொடுக்கவில்லை எனில் அது அமெரிக்காவுக்கே அவமானம்! - டிரம்ப்

அகமதாபாத் டெஸ்ட்: சிராஜ் பந்துவீச்சினால் தடுமாறும் மே.இ.தீ.!

சரியத்தொடங்கியது மேட்டூர் அணை நீர்மட்டம்!

பெளர்ணமி: விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள்!

SCROLL FOR NEXT