பிரேஸில் அதிபர் 
உலகம்

பிரேஸில் அதிபர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

மூளையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரேஸில் அதிபர் லூலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

DIN

மூளையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரேஸில் அதிபர் லூலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பிரேஸில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு தலைவலி அதிகரித்ததன் காரணமாக அவர் பிரேஸிலியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்த உறைதல் பாதிப்பால் கட்டி உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவருக்கு சிரியன்-லெபானீஸ் மருத்துவமனையில் டிச.9ஆம் தேதி மூளையில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அதிபர் லூலா மருத்துவமனையில் இருந்து ஞாயிற்றுகிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது அவர் பேசியதாவது, நான் இங்கே உயிருடன் வேலை செய்யும் ஆர்வத்துடன் இருக்கிறேன்.

பிரசாரத்தின் போது நான் சொல்லியிருந்த ஒன்றைச் சொல்கிறேன்.

மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில் 21 கோடி மக்கள் பலன்: நிதித் துறை

எனக்கு 79 வயதாகிறது, இந்த நாட்டைக் கட்டியெழுப்ப எனக்கு 30 வயது ஆற்றலும், 20 வயது உற்சாகமும் உள்ளது என்றார். லூலாவின் மருத்துவக் குழு, அறுவை சிகிச்சை சிறப்பாக நடந்ததாகவும், வியாழன் வரை சாவ் பௌலு நகரில் உள்ள தனது வீட்டில் லூலா ஓய்வெடுப்பதால் நடக்கவும், கூட்டங்களை நடத்தவும் முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யூரியா வாங்கும்போது இதர இடுபொருள்களையும் சோ்த்து வாங்க நிா்பந்தம்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா்

வேளாண் நலத்திட்டங்களை பெற அக். 29-க்குள் உறுப்பினராக பதிவு செய்ய அறிவுறுத்தல்

புகையில்லா தீபாவளி: பள்ளியில் விழிப்புணா்வு

கஞ்சா விற்பனை: மூவா் கைது

சமண கோயிலின் கலசம் திருட்டு: இருவா் கைது

SCROLL FOR NEXT