உலகம்

பள்ளி நிகழ்ச்சியில் 30 பேர் பலி!

நைஜீரியா நாட்டில் பள்ளி நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர்.

DIN

நைஜீரியா நாட்டில் பள்ளி நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர்.

நைஜீரியா நாட்டின் ஓயோ மாகாணம் பசொரன் நகரில் இயங்கி வந்த பள்ளிக்கூடத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு நிறைவையும் கொண்டாடும் விதமாக, புதன்கிழமை (டிச. 18) கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டன.

கலை நிகழ்ச்சிகளைக் காணவும், பரிசுப் பொருள்களை வாங்கவும் குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடினர். இந்த நிலையில், கூட்டத்தினரிடையே எதிர்பாராத விதமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 30 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இதனையடுத்து, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT