3டி பிரிண்டட் துப்பாக்கி - பிரதி படம் 
உலகம்

காப்பீட்டு நிறுவன நிர்வாகி கொலை: தலைதூக்கும் 3டி-பிரிண்டட் துப்பாக்கி! அப்படி என்றால்?

காப்பீட்டு நிறுவன நிர்வாகி கொலையில் 3டி-பிரிண்டட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதா?

PTI

அமெரிக்காவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த யுனைடெட் ஹெல்த்கேரின் தலைமை செயல் நிர்வாகி பிரையன் தாம்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், 3டி-பிரிண்டட் துப்பாக்கிப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தைச் சேர்ந்த யுனைடெட் ஹெல்த் குழுமத்தின் கிளை நிறுவனமான யுனைடெட் ஹெல்த் கேர் தலைமை செயல் நிர்வாகி பிரையன் தாம்சன் (50) டிச. 4ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில், கொலையாளி, 3டி-பிரிண்டட் துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள். அண்மையில் நடந்த மிகப்பெரிய கொலை வழக்குகளில் இந்த வகை 3டி-பிரிண்டட் துப்பாக்கிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பது, காவல்துறையினரிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அது என்ன 3டி-பிரிண்டட் துப்பாக்கி..

அதாவது, இது வீட்டிலேயே அல்லது பகுதியாக வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள்தான் இவை. இவற்றை பேய்த் துப்பாக்கிகள் என்கிறார்கள். காரணம் இதனைக் கண்டுபிடிப்பதே கடினம். ஏன் அப்படி என்றால், 3டி பிரிண்டர்களில் இருக்கும் உலோக மற்றும் பிளாஸ்டிக் அமைப்புகளைக் கொண்டே பெரும்பாலும் அல்லது முழுமையாக இந்த வகை துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகிறதாம்.

முதன் முதலில், இதுபோன்ற ஒரு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது 2013ஆம் ஆண்டு, பிரிட்டனில். பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அது முதல், உலகம் முழுவதும் 3டி-பிரிண்டட் துப்பாக்கிகள் கைப்பற்றப்படுவது அல்லது பயன்படுத்தும் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

அதாவது 2017 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் மட்டும் 38,000 பேய் துப்பாக்கிகள் எனப்படும் 3டி-பிரிண்டட் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதாவது உலகிலேயே 3டி-பிரிண்டட் துப்பாக்கிகள் அதிகம் பயன்படுத்தும் பகுதியாக அமெரிக்கா மாறியிருக்கிறது. கனடா அடுத்த இடத்தில் உள்ளது. பிரிட்டன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

ஒரு குற்றத்தில் ஈடுபடுபவர்களை, குற்றவாளிகள் என நிரூபிக்க அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம்தான் முக்கிய ஆதாரமாக இருக்கும் நிலையில், இதுபோன்ற 3டி-பிரிண்டட் துப்பாக்கிகளை குற்றச் சம்பவங்களுக்குப் பயன்படுத்திவிட்டு, அதனை அழிப்பது எளிதாக இருப்பதால் ஒருபோதும் அதனைக் கண்டுபிடிக்க முடியாத நிலை இருப்பதால் உலகம் முழுக்க இது காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக மாறி நிற்கிறது.

இந்த துப்பாக்கிகளுக்கு எதிராக கடும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், இதன் உருவாக்கத்தைத் தடுக்க முடியவில்லை என்றே சொல்லலாம்.

பொதுவாக துப்பாக்கி உரிமம், துப்பாக்கித் தயாரிப்பு, விற்பனை போன்றவற்றுக்கு பல நாடுகளிலும் பல கட்டுப்பாடுகள் இருந்தாலும், இந்த 3டி-பிரிண்டட் துப்பாக்கிகளுக்கு அதனை செயல்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. இந்த அபாயம் உலகம் முழுவதும் பரவி வருவது கவலைதருவதாகவே உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மீட்புப் பணியின்போது மீண்டும் தாக்குதல்!

ஆக. 28 ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி: ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் முதல்முறையாக இருதரப்பு பேச்சு!

வெவ்வேறு நட்சத்திரங்களில் நின்ற "சனி" தரும் பலன்கள் என்னென்ன?

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜாமீன்!

கவின் கொலை வழக்கு: நீதிமன்றக் காவல் 15 நாட்கள் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT