உலகம்

கஜகஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து தீப்பற்றியது! 42 பேர் பலி

அஜர்பைஜானில் இருந்து ரஷியாவுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.

DIN

அஜர்பைஜானில் இருந்து ரஷியாவுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.

அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ரஷியாவின் க்ரோஸ்னி நகருக்கு அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 62 பயணிகள் மற்றும் விமானி உள்பட 5 பணியாளர்கள் என 67 பேர் இருந்தனர்.

கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் கஜகஸ்தானுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.

அப்போது கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையத்திற்கு அருகே அவசரமாக தரையிறக்க விமானி கோரிக்கை விடுத்தார். அவ்வாறு தரையிறங்கும்போது விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. விமானம் தரையிறங்குவதற்கு முன் வானில் சிறிது நேரம் வட்டமடித்ததாகக் கூறப்படுகிறது.

விமானத்தில் பயணித்தவர்களில் 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

மீதமுள்ளவர்களின் நிலை தெரியவில்லை. விமான விபத்திற்கான காரணமும் இன்னும் தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT