தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்!
தஜிகிஸ்தானில் வியாழக்கிழமை(டிச.26) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
தஜிகிஸ்தானில் வியாழக்கிழமை(டிச.26) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ளதாவது:
தஜிகிஸ்தானில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 5.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
நிலத்துக்கடியில் சுமார் 130 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாகப் பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும், இந்த நிலநடுக்கத்தால் பொருள் சேதமோ, உயிர்சேதமோ எதுவும் நிகழ்ந்ததாக உடனடி தகவல் இல்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.