உலகம்

ஜெமினியாகும் கூகுள் பார்டு?

DIN

கூகுளின் புதிய செய்யறிவு தொழில்நுட்பமான பார்டை (Bard) பெயர் மாற்றம் செய்யப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பார்டுடன் புதிய ஜெமினி (Gemini) செய்யறிவு தொழில்நுட்பத்தை இணைத்துள்ள கூகுள், பார்டையும் 'ஜெமினி' எனப் பெயர் மாற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஓப்பன் ஏஐ (Open AI) நிறுவனத்தின் சாட் ஜிபிடிக்கு (Chat GPT) போட்டியாக களமிறங்கிய ஜெமினியில் பல புதிய மாற்றங்களைத் தொடர்ந்துவருவதாக கூகுள் தெரிவிக்கிறது. பெயர் மாற்றம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், ஜெமினி செயலி உருவாக்கும் டைலன் ரௌசெல்லிடமிருந்து கிடைத்த தகவல்படி அநேக பெயர்மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், ஜெமினியில் குரல்வழி உரையாடல்களை மேற்கொள்ளும் வகையிலான புதிய அம்சங்களையும், ஜெமினை அட்வான்ஸ்டு அல்ட்ரா 1.0 (Gemini advanced - ultra 1.0) என்ற புதிய ஜெமினி வடிவத்தையும் கூகுள் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஜெமினி அட்வான்ஸ்டு இதுவரை 230 நாடுகளில் கிடைக்கிறது. இந்த சேவைக்கு பணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 40 மொழிகளில் இந்த ஜெமினி செய்யறிவு இயங்குகிறது. அதில் தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளும் அடங்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயிலில் 1,008 விளக்கு பூஜை

ஆனந்தவல்லி வாய்க்காலை சீரமைக்கக் கோரிக்கை

சியாமா சாஸ்திரி ஜெயந்தி விழா இசை நிகழ்ச்சி

மகளிா் உரிமைத் தொகை திட்டம் 4.17 லட்சம் குடும்பத்தினா் பயன்

குடிநீா் குழாயுடன் பொருத்தப்பட்ட 12 மின் மோட்டாா்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT