உலகம்

நமீபியன் பிரதமர் காலமானார்

DIN

நமீபியா நாட்டின் பிரதமர் ஹாகே ஹெயின்கோப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. 

எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பிரதமர் அலுவலகத்தின் பதிவில் மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் சிகிச்சை பலனின்றி ஜிங்கோப் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.

புற்றுநோயால் ஹாகே ஹெயின்கோப் பாதிக்கப்படிருந்தார். ஜன.8-ல் அதற்கான சிகிச்சை பயாப்ஸியைத் தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நம்பீயாவின் பொறுப்பு பிரதமர்,  ஆட்சி தொடர்பாக முடிவு செய்ய அமைச்சரவை விரைவில் கூட்டப்படும் எனத் தெரிவித்தார்.

2015-ல் பிரதமராக பொறுப்பேற்ற ஹெயின்கோப், அவரது இரண்டாவது மற்றும் இறுதி ஆட்சியை இந்தாண்டு நிறைவு செய்யவிருந்தார். அடுத்த தேர்தல் நவம்பரில் நடைபெறவுள்ளது.

2014-ம் ஆண்டிலேயே புரோஸ்டேட் கேன்ஸரில் இருந்துதான் மீண்டு வந்ததாக அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - ஷாருக்கான்

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT