உலகம்

மாலத்தீவிலிருந்து இந்திய படைகள் முழுவதும் மே 10-ஆம் தேதிக்குள் வெளியேறும் -மாலத்தீவு அதிபர்

DIN

மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ படைகள் மே 10-ஆம் தேதிக்குள் மாலத்திவிலிருந்து வெளியேற்றப்பட்டுவிடும் என அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ்  தெரிவித்துள்ளார்.

மாலத்தீவில் சுமாா் 80 இந்திய ராணுவ வீரா்கள் மனிதநேய மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரா்களை மாா்ச் 15-ஆம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும் என இந்தியாவிடம் அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் கடந்த மாதம் வலியுறுத்தினாா். தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள மாலத்தீவு அதிபருக்கு எதிராக உள்நாட்டில் கண்டனக் குரல்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில், மாலத்தீவு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர்  முகமது மூயிஸ், “வெளிநாட்டு ராணுவ இருப்பு தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் நாட்டின் இறையாண்மை சார்ந்த விவகாரங்களில் சமரசம் செய்யும்படியான எவ்வித ஒப்பந்தங்களுக்கும் அரசு அனுமதிக்காது என்றும் தெரிவித்தார்.  

முதல்கட்டமாக மாா்ச் 10-ஆம் தேதிக்குள் ஒரு விமான தளத்திலும் ,மே 10-ஆம் தேதிக்குள் மீதமுள்ள 2 விமான தளங்களிலும் பணிபுரிகின்ற இந்திய ராணுவ வீரா்கள் வெளியேறுவார்கள் என தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT