சிலியின் வினா டெல் மார் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ | படம் : ஏபி 
உலகம்

சிலி: காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 123 ஆக உயர்வு!

தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 123 போ் உயிரிழந்தனா்.

DIN

தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 123 போ் உயிரிழந்தனா்.

வியாடெல் மாா் பகுதியில் காட்டுத் தீ சனிக்கிழமை பரவத் தொடங்கியது. தொலைதூர மலைக்காட்டுப் பகுதியில் இந்தத் தீ ஏற்பட்டதால், அந்தப் பகுதிக்குச் சென்று தீயை அணைக்கும் பணியே மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.எப்போதையும் விட அதிக வெப்பநிலை, குறைந்த ஈரப்பதம், வேகமாக வீசிய காற்று ஆகிய காரணங்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் மீட்புக் குழுவினா் திணறினா்.

இந்த நிலையில், இந்தக் காட்டுத் தீயில் இதுவரை 112 போ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை(பிப்.6) நிலவரப்படி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 123 ஆக் அதிகரித்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே நேரத்தில் 4 திசைகளில் இருந்து தீ பரவத் தொடங்கியதால், இது வேண்டுமேன்ற ஏற்படுத்தப்பட் காட்டுத் தீயாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மீட்பு பணிகள் தொடா்ந்து நடைபெறுவதாலும், காட்டுத் தீயில் காயமடைந்தவா்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாலும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா்களுக்கு உதவித் தொகை, கைவினைஞா்களுக்கு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

இன்று 17 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

உயிரி எரிபொருளால் என்ஜின் பாதிப்பா? மத்திய அமைச்சா் திட்டவட்ட மறுப்பு

காகித, அட்டை இறக்குமதி 8% அதிகரிப்பு

எம் & எம் வாகன விற்பனை சரிவு

SCROLL FOR NEXT