உலகம்

மார்வல் படப்பிடிப்புத் தளத்தில் விபத்து, ஒருவர் பலி!

மார்வல் ஸ்டூடியோஸின் புதிய படத்திற்கான படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

DIN

உலகளவில் உச்சம் தொட்ட திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மார்வல் ஸ்டூடியோஸ் தற்போது பல புதிய படங்களைத் தயாரித்து வருகிறது. அதில் 'ஒன்டர் மேன்' (wonder man) திரைப்படமும் முக்கிய தயாரிப்பாக இருக்கிறது. 

இந்நிலையில் ஒன்டர் மேன் படப்பிடிப்புத் தளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பணியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒன்டர் மேன் படப்பிடிப்பில் ரிக்கராக பணிபுரிந்த அவர், செட்டில் உயரமான இடத்திலிருந்து தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. 

'அவரின் குடும்பத்திற்கு எங்களது வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு எங்களது முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறோம்' என மார்வலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

'எங்களது உறுப்பினரின் குடும்பத்திற்கு ஆதரவளிக்க எல்லா முயற்சிகளையும் செய்துவருகிறோம்' என சர்வதேச நாடக மேடை ஊழியர்கள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த உத்தரவு!

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம், ஆனால்... இலங்கை அணியின் கேப்டன் கூறுவதென்ன?

பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!

பிரதமர் மோடியுடன் நேபாள இடைக்கால பிரதமர் உரையாடல்!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

SCROLL FOR NEXT