உலகம்

அமேசானின் பங்குகளை விற்கும் ஜெப் பெசோஸ்!

DIN

அமேசான் விற்பனை தளத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ் அமெரிக்க ஆணையத்துக்கு அளித்த அறிக்கையில், 200 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஏறத்தாழ 1.2 கோடி அமேசான் பங்குகளை விற்றதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்துக்கு அவர் அளித்த அறிக்கையில், பிப்.7 மற்றும் பிப்.8 ஆகிய தேதிகளில் 1 கோடியே 19 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சியாட்டலை தலைமையிடமாக கொண்டுள்ள அமேசானின் நிகர மதிப்பு 2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிகம். 30 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் கேரேஜில் ஆரம்பித்த அமேசான் இன்று உலகம் முழுவதும் செயல்படும் விற்பனை நிறுவனம்.

மற்றொரு அறிக்கையில் பெசோஸ், 840 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள அமேசானின் 5 கோடி பங்குகளை விற்கவுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

பெசோஸ், 2021-ல் அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார். அவரது மற்ற திட்டங்களான, ஏவுகணை நிறுவனம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT