உலகம்

சீனாவில் அதிகரிக்கும் தங்க மோகம்!

DIN

அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் வைரத்துக்கான சந்தையாக இருந்த சீனாவின் தற்போதைய ஆர்வம் தங்கத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

2023-ல் உலகளவில் தங்கத்துக்கான விற்பனையில் இந்தியாவைப் பதிலீடு செய்யும் அளவுக்கு சீனாவில் தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

சீனா பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ள நிலையில் ரியல் எஸ்டேட், பங்குகள், வங்கி வட்டி விகிதம் ஆகியவற்றை விடவும் முதலீட்டுக்கான சிறந்த வாய்ப்பாக தங்கம் அங்கு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தங்கத்தை வாங்குவதில் இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாக செளத் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவிக்கிறது.

இதற்கு எதிர்மாறாக தங்கத்தின் விலை கடந்த ஆண்டு புதிய உச்சத்தை தொட்டது. வசதி குறைவான மக்களும், 3 மற்றும் 4-ம் கட்ட நகரங்களிலும் தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது.

உலகளவில் ஒட்டுமொத்த தங்கத்துக்கான தேவை 5 சதவிகிதம் குறைந்த நிலையில் சீனாவில் மட்டும் 16 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தங்கத்துக்கான உலக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீர்திருத்தப் பள்ளிக்கு பதில் சிறையில் அடைக்கப்பட்ட 9,600 சிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி!

ஆழ்கடலில் சாகசப் பயணம்

ஏஐ எனும் ஏழாம் அறிவு

ஒரு பித்தனின் குறிப்புகள்

அம்மா ஆங் சான் சூச்சி

SCROLL FOR NEXT