கோஹர் அலி கான் படம் : டிவிட்டர்
உலகம்

பாக். : இம்ரான் கான் கட்சித் தலைவர் பதவி பறிப்பு!

இம்ரான் கான் கட்சியின் (பிடிஐ) தலைவர் பொறுப்பிலிருந்து, பாரிஸ்டர் கோஹர் அலி கான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

DIN

இம்ரான் கான் கட்சியின் (பிடிஐ) தலைவர் பொறுப்பிலிருந்து, பாரிஸ்டர் கோஹர் அலி கான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 8-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. அதனுடன் சோ்த்து பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், கைபா் பக்துன்கவா ஆகிய மாகாணப் பேரவைகளுக்கும் தோ்தல் நடைபெற்றது.

பிப். 8-இல் நடைபெற்ற பொதுத் தோ்தலில், அதிகபட்சமாக முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்கள் 93 இடங்களைக் கைப்பற்றினா்.

நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சிக்கு 75 இடங்கள் கிடைத்தன. முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் மகனும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 54 இடங்களில் வெற்றி பெற்று 3-ஆம் இடம்பிடித்தது.

எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும் முடிவை தற்போது சிறையிலுள்ள இம்ரான் கான் நிராகரித்துவிட்டார். இந்த சூழலில், பாகிஸ்தானில் ’பிபிபி’ மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் ’பிஎம்எல்-என் கட்சி’ புதிய அரசை அமைக்கவிருக்கிறது.

இந்நிலையில், தேர்தலில் மோசமான செயல்பாடு காரணமாக, இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) தலைவர் பொறுப்பிலிருந்து, பாரிஸ்டர் கோஹர் அலி கான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அக்கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க உள்கட்சித் தேர்தல் மார்ச் 3-ஆம் தேதி நடைபெறும் என்றும், கட்சியின் புதிய தலைவராக 71 வயதான பாரிஸ்டர் அலி ஸாபர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT