விவேக் ராமசுவாமி படம் | ஏபி
உலகம்

அமெரிக்கா: குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக விவேக் ராமசுவாமி..?

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் போட்டியில் குடியரசுக் கட்சி சார்பில் விவேக் ராமசுவாமி உள்ளார்.

DIN

குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடையே போட்டி கடுமையாகியுள்ளது.

அமெரிக்காவின் 47-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபா் தேர்தல், இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் அதிபா் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பெரும்பாலான இடங்களில் தேர்வாகியுள்ளார்.

குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபா் வேட்பாளராக டிரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி தெற்கு கரோலினாவிலும் தோல்வியைடைந்தார். எனினும் தான் போட்டியில் நீடிப்பேன் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடையே போட்டி கடுமையாகியுள்ளது.

குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசுவாமி மற்றும் தெற்கு டகோட்டா ஆளுநர் கிறிஸ்டி நோம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட 38 வயதான தொழிலதிபர் விவேக் ராமசுவாமி, முன்னதாக குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் பங்கேற்ற நிலையில், அதன்பின், டொனால்டு டிரம்புக்கு ஆதரவளிப்பதாகக் கூறி அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில், தற்போது துணை அதிபர் வேட்பாளர் போட்டியில் அவர் களம் காண உள்ளார்.

கிறிஸ்டி நோம்

விவேக் ராமசுவாமியை எதிர்த்து களம் காண உள்ள 52 வயதான கிறிஸ்டி நோம் தெற்கு டகோட்டாவின் முதல் பெண் ஆளுநராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 கோடி பார்வைகளைக் கடந்த மோனிகா பாடல்!

இந்திய பேட்டிங் வரிசையில் ‘தடுப்புச் சுவராக’ திகழ்ந்தவர்! -புஜாராவுக்கு பிசிசிஐ புகழாரம்

மேற்கு மல சாரலிலே... ரோஸ் சர்தானா

ரூ.71,900 சம்பளத்தில் தமிழ்நாடு பிரிண்டிங் துறையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

கண் இரண்டில் மோதி... குஷி தூபே!

SCROLL FOR NEXT